மூன்று மாடல்களில் புதிய ஒன்பிளஸ் டிவி : விரைவில் வெளியீடு

மூன்று மாடல்களில் புதிய ஒன்பிளஸ் டிவி : விரைவில் வெளியீடு

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய டிவி சீரிஸ் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மொத்தம் மூன்று மாடல்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் புதிய டிவி மாடல்களின் விலை முறையே ரூ. 1X999 இல் துவங்கி ரூ. 4X999 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் டிவி மாடல்கள் இந்தியாவில் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கப்பட்டது. புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் ஹெச்டி டிவி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி அளவுகளில் வெளியாகும் என்றும் இவற்றின் விலை முறையே ரூ. 1X999 மற்றும் ரூ. 2X999 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக இரு ஸ்மார்ட் டிவி மாடல்களும் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆனது. ரூ. 4X999 விலை ஸ்மார்ட் டிவி 55 இன்ச் டிவி என கூறப்படுகிறது. மேலும் இதில் 4கே டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

0 Comments: